July 1, 2017 தண்டோரா குழு
ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லைஎன தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
ஜிஎஸ்டி வரி விதிப்பால் வருவாய் இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஜிஎஸ்டியை ஜெயலலிதா முன்மொழிந்தார். ஜிஎஸ்டியில் ஜெயலலிதா கூறிய திருத்தங்கள் ஏற்கப்பட்டதால் ஆதரித்தோம்.தமிழகத்தை பொருத்தவரை ஜிஎஸ்டி வரி முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாநில வருவாய் பாதிக்காது. ஏழை எளிய மக்கள் விலைவாசி ஏற்றத்திலிருந்து பாதுகாக்கப்படுவர்.உலகம் முழுவதும் 148நாடுகளில் ஒரே வரித்திட்டம் நடைமுறையில் உள்ளது. அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான வருவாய் கிடைக்கும்.ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.