July 1, 2017 தண்டோரா குழு
தாய்லாந்தின் காவல்துறை அதிகாரி கத்தியுடன் மிரட்டிய நபரை அன்பாக அணைத்து, அவருடைய கையிலிருந்த கத்தியை கைபற்றியுள்ளார்.
பொதுவாக காவல்துறை அதிகாரி என்றாலே எளிதில் அணுக முடியாதவர்கள், கண்டிப்புடைவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், கொடூரமானவர்கள் என்று மக்களிடம் வெவ்வேறு கருத்துக்கள் உண்டு.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டின் கோய் க்வாங் காவல்நிலையத்தில் கையில் கத்தியுடன் வந்த ஒரு வாலிபன் தன்னை தானே கொலை செய்துக்கொள்ள போவதாக அங்கிருத்தவர்களை அச்சுருத்தி உள்ளான்.
அன்று கடமையிலிருந்து காவல்துறை அதிகாரி மூத்த சார்ஜென்ட் மேஜர் அனிருஜ் மாலீ, கத்தியுடன் ஒரு வாலிபன் காவல்நிலையத்திற்குள் வருவதை கவனித்து உள்ளார். அவனிடம் மெதுவாக பேச்சு கொடுத்துள்ளார். அவனுடைய நம்பிக்கையை பெற்றுக்கொண்ட பிறகு, அவனுடைய கதையை கேட்டுள்ளார்.
“ஒரு இசைக்கலைஞரான நான், ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய எஜமானி என்னுடைய சம்பள விஷயத்தில் என்னை ஏமாற்றிவிட்டார். என்னுடைய கிட்டாரும் திருட்டு போய்விட்டது. இதனால் நம்பிக்கை இழந்த நான், இப்படி நடந்துக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.
இதை கேட்ட அனிரூத் அவனை கட்டி அணைத்து, தன்னிடமிருக்கு ஒரு கிட்டாராய் அவனுக்கு தருவதாக கூறி, அவன் கையிலிருந்த கத்தியை வாங்கியுள்ளார். அவனுக்கு குடிக்க தண்ணீர் தந்துள்ளார். கோய் க்வாங் காவல்நிலையத்தில் நடந்த அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்த காணொளியை பார்த்த ஜெனரல் சக்திப் சைசுண்டா அனிரூஜய் பாராட்டியுள்ளார்.