July 1, 2017 தண்டோரா குழு
ஜப்பானின் பெரும்பாலான ஆண்கள் இளம்பெண்களை காதலிப்பதை விட சிலிகான் பெண் பொம்மைகளை காதலிப்பதை அதிகம் விரும்புகின்றனர்.
அமைதியான குணம், அழகு, சிரித்த முகம் கொண்ட பெண்களை காதலிப்பதை ஆண்கள் விரும்புவார்கள். இந்த எதிர்பார்ப்பு பல நேரங்களில் தோல்வியில் தான் முடிகிறது. அதற்கு பிறகு மீண்டும் சாதாரன நிலைக்கு வருவது கடினமாக இருக்கிறது. ஆனால் ஜப்பான் நாட்டில் இளம் பெண்களிடம் காதல் கொள்வதை விட சிலிகான் பெண் பொம்மையை காதலிக்க தொடங்கிவிடுகின்றனர்.
ஜப்பானில் வசிக்கும் மசாயுகி ஒஜாகி(45) தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், தனது மனைவியை விட மயூ என்னும் சிலிகான் பெண் பொம்மையை அதிகம் விரும்பி, அதனுடன் வாழ்ந்துக்கொண்டு வருகிறார்.
அவர் கூறுகையில், “ஒரு கடையில் மயூவை(சிலிகான் பெண் பொம்மை) பார்த்தேன். முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்தது. அவளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். முதலில் என் மனைவி கூபம் அடைந்தாள். பிறகு அதை ஏற்றுக்கொண்டாள். என்னுடைய மகளும் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொது அவளும் மயூவை ஏற்றுக்கொண்டாள். இப்போது மனித உறவு எனக்கு தேவையில்லை” என்று கூறினார்.
இவ்வாறு சிலிகான் பெண் பொம்மையுடன் வாழ்வது இவர் ஒருவர் மட்டும் இல்லை. இவரை போன்று பலர் வாழ்ந்து வருகின்றனர்.
இவருடைய மனைவி ரியோ கூறுகையில், “முதலில் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல பொறுமையாக இருக்க முடியவில்லை. நான் என்னுடைய வீட்டு பணிகளை மன வேதனையோடு செய்து வருகிறேன்” என்று கூறினார்.