July 3, 2017 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்த்திகேயன் தகவல்.
கோவை மாநகராட்சியில் 1871 முதல் 2015-ம் வருடம் வரையிலான பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2011-ம் வருடம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகள் பிறப்பு, இறப்பு பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை (www.ccmc.gov.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
எனவே, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் 1981 முதல் 2015 வரையிலான வருடங்களுக்கான சான்றிதழ்கள் இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சான்றிதழ்களை பெற தபால் தலை ஒட்டிகள் மூலம் இணைத்து விண்ணப்பித்தால் தபால் மூலம் அனுப்பப்படும். அதே போல் கூரியர் மூலம் வேண்டும் என விண்ணப்பித்தால் கூரியரில் அனுப்பப்படும்.
கோவை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவு மற்றும சான்றிதழ்கள் அனைத்தும் அலுவலக மென்பொருள் கொண்டு பயன்படுத்துவதில்லை. கோவை மாநகராட்சிக்கென தனியான மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.