July 3, 2017 தண்டோரா குழு
ரஷ்யாவிலுள்ள உயரமான மவுண்ட் எல்பிருஸ் சிகரத்தின் மீது 9 வயது இந்திய சிறுமி ஏறி சாதனை புரிந்துள்ளாள்.
குஜராத் மாநிலம் சுரத்தை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது தனஸ்ரீ என்ற மாணவி ரஷ்யாவின் 18,510 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் எல்பிருஸ் சிகரத்தில் ஏறிய இளமையான சிறுமி என்னும் பெருமையை பெற்றுள்ளார்.
தனுஸ்ரீ, தனது தாய் சரிகா, தந்தை ஜிக்னேஷ், மற்றும் 13 வயது சகோதரன் ஜனமுடன் ஜூன் 13-ம் தேதி மலையேற தொடங்கி ஜூன் 18-ம் தேதி கீழே வெற்றிகரமாக இறங்கினார்.
இது குறித்து மருத்துவர், மலை ஏறுபவரான தனுஸ்ரீயின் தாயார் சரிகா கூறுகையில், “மலை ஏறிக்கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட பனி காற்றால், குழந்தைகளில் நலம் கருதி, திரும்பி வந்துவிடலாம் என்று கூட நானும் என் கணவரும் நினைத்தோம். ஆனால், மலையின் முக்கால் பகுதி வந்துவிட்டோம், சிகரத்தை தொடுவோம் என்று குழந்தைகள் மனதிடத்துடன் கூறியது வியப்பை தந்தது. கடைசி நாளில் 1௦ முதல் 12 கிலோ சுமைகளை சுமந்துக்கொண்டு, சிகரம் தொட 11 மணிநேரம் எங்களுக்கு தேவைபட்டது”” என்று கூறினார்.
தனுஸ்ரீ கூறுகையில், “எனது தாய் எவரெஸ்ட் சிகரத்தை ஏறியதில்லை. நானும் அதில் ஏற வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நாள், நாங்கள் குடும்பமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோம் என்று நம்புகிறேன்”” என்று தெரிவித்தார்.