July 3, 2017
தண்டோரா குழு
நடிகரும் நடிகர் சங்க தலைவருமான நாசரின் மகன் ஃபைசல்கடந்த 2014ம் ஆண்டு சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தளபதி விஜய் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
அதோடு, அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் முகப்பில் வைத்து நாசர் தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.