• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோடநாடு எஸ்டேட் தொடரும் மர்மம்: கோடநாடு எஸ்டேட் கணக்காளர் மர்ம மரணம்

July 3, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த கணக்காளர் இன்று மர்ம முறையில் இறந்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை போலீசார் 10 பேரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் மற்றும் சயான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விபத்தில் சிக்கினர். இதில் கனகராஜ் இறந்து போனார். யார் உண்மை குற்றவாளி என்று மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் கணக்காளராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் 28. அவரது இல்லத்தில் இன்று திடீரென இறந்துள்ளார்.

இதையடுத்து, இந்த சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் கோடநாடு எஸ்டேட் தொடர்ந்து மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க