July 4, 2017 தண்டோரா குழு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி,மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று இஸ்ரேல் செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் அமைகிறது.
இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.இச்சந்திப்பின் போது இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது, விமான போக்குவரத்து, முதலீடு ஆகியவைகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
மேலும்,இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ள மோடி, ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த உள்ளார்.இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.