July 4, 2017
தண்டோரா குழு
குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் மற்ற மதுபானங்களை விட உடலுக்கு நல்லது என ஆந்திர மாநில அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற அனைத்து மதுபானங்களை விட குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆந்திர மாநில அமைச்சர் கொத்தபலி சாமுவேல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஆந்திர மாநில அரசு பீர் விற்பனையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது. குடிக்கும் மக்களின் பழக்கத்தை மாற்ற முடியாது. ஆனால், குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட பானங்களை அறிமுகப்படுத்தலாம். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பல பெரிய நிறுவனங்களின் பீர்களை விட குறைந்த ஆல்கஹால் இருக்கும் உள்ளுரில் உற்பத்தியாகும் பீர் மதுபானம் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.