July 5, 2017 தண்டோரா குழு
ஜி.எஸ்.டி.குறித்து தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில அரசு 30% கேளிக்கை வரி வசூலித்து வரும் நிலையில், ஜி.எஸ்.டி 28% சேர்த்து மொத்தம் 58% வரி செலுத்த வேண்டி வரும். அதனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறி ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை எதிர்த்து சினிமா துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், திரையரங்குகள் கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பல சினிமா பிரபலங்கள் ‘ரஜினி ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை ‘என்று விமர்சிக்க தொடங்கினர்.
இதனால், இன்று இந்த பிரச்சனை பற்றி ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சினிமா துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் நலனுக்காக, தமிழ் நாடு அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.