July 5, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி இன்று மூன்றாவது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டத்தை அறிமுகப்படுத்தியது.தமிழகத்தில் மட்டும்,சினிமாத்துறையில் ஜிஎஸ்டி வரி மட்டுமில்லாமல் கேளிக்கை வரியையும் ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 30 சதவிகித கேளிக்கை வரி செலுத்திவரும் நிலையில், மேலும் 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சினிமாத்துறைக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள இந்த இரட்டை வரி முறையை ரத்து செய்யக்கோரி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால்
கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ 35 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,தமிழகத்தில் 3வது நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் படங்கள் குறித்த எந்த விளம்பரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.