July 5, 2017 தண்டோரா குழு
இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ள இந்திய பிரதமரை கௌரவிக்கும் விதமாக, அங்கு அதிகமாக வளரும் கிரைசாந்துமன் மலருக்கு “மோடி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றுள்ளார்.அங்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,மற்ற மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்துக்கு நேரில் வந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டின் பிரதமருடன்,டேன்சிங்கர் மலர் பண்ணைக்குச் சென்றார். அங்கு அவர் மலர் சாகுபடியில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
இதனையடுத்து டேன்சிங்கர் மலர் பண்ணைக்குச் மோடி வந்ததை நினைவு கூறும் வகையில் கிரைசாந்துமன் பூ ஒன்றுக்கு `மோடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.