May 18, 2016 தண்டோரா குழு
உத்திரபிரதேச மாநிலத்தில் தன் ஆசைக்கு இணங்க மறுத்த ஆணின் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள வைசாலி என்ற ஊரில் கால்நடை மருத்துவ மையம் வைத்துள்ளார் அமித் வர்மா(28). இவர் மீது கடந்த திங்கள்கிழமை பெண் ஒருவர் 4 லிட்டர் ஆசிடை ஊற்றியுள்ளார்.
தற்போது 40 சதவிகிதம் உடல் எறிந்து முகம், கை, வயிறு மற்றும் நெஞ்சு ஆகியவை சேதமாகியுள்ள நிலையில் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இவருடன் தங்கியிருந்த தீபக் என்பவர் கூறுகையில், அமித் வர்மா அலிகர் நகரைச் சேர்ந்தவர்.
இவர் இதற்கு முன்னர் மீரட் உள்ள கால்நடை மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான 45 வயதுமிக்க பெண்ணிடம் நெருக்கமாகப் பழகி வந்தார். பின்னர் காசியாபாத்தில் குடியேறினார்.
இது பெண்ணிற்கு பிடிக்கவில்லை எனக்கூறினார். மேலும், வர்மா அந்தப் பெண்ணை ஆண்டி எனத் தான் அழைப்பார் எனவும் கடந்த 18 நாளில் 3 முறை சந்தித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பெண்ணின் துப்பட்டா மற்றும் பர்சை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கோரக்நாத் யாதவ் என்பவர் கூறுகையில், சம்பவ இடத்தில் கிடைத்த ஒரு பர்ஸில் ஒரு பெண்ணின் அடையாள அட்டைக் கிடைத்துள்ளது.
ஆனால், இது குறித்து விசாரித்த போது அந்த அடையாள அட்டையில் உள்ளவர் அமித் வர்மாவின் காதலி எனவும் அவர் மீது பழிசுமத்தும் விதமாக அந்தப் பெண் இவரது அடையாள அட்டையை வைத்துள்ளார் எனவும் தீபக் கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆசிட் வீச்சு சமந்தமாக உண்மை குற்றவாளியை கண்டறிய வேண்டும் எனில் அமித் வர்மா பேசவேண்டும்.
தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் அவரது குடும்பத்தினர் இது குறித்து புகார் அளித்தவுடன் வழக்குப் பதிவு செய்து உண்மையான குற்றவாளியை பிடிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் முகத்தில் ஆண்கள் ஆசிட் வீசிய காலம் போய் தற்போது, ஆண்கள் மீது பெண்கள் ஆசிட் வீசும் காலம் வந்துவிட்டது என்பதை நினைக்கும் பொது சற்று பயமாகத்தான் இருக்கிறது.
மொத்தத்தில் இந்திய அளவில் ஆசிட் என்பது அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை எனத் தெரிகிறது. இதை எத்தனைச் சட்டங்கள் போட்டாலும் தடுக்க முடியாது என்பதும் பட்டவர்த்தனமாக தெரிகிறது.