July 5, 2017
தண்டோரா குழு
தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ விஜய் கூட்டணியில் உருவாகிவரும் படம் மெர்சல். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயிலில் உள்ளது.
காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோரது காட்சிகள்ஏற்கனவே, படமாக்கப்பட்டுவிட்ட நிலையில்தற்போது சமந்தா இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவான பாடல் ஒன்றின் படப்பிடிப்பு அண்மையில் நடந்து நடந்துள்ளது. இதில் காமெடி நடிகர் வடிவேலுக்கு காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.