July 5, 2017 தண்டோரா குழு
நாட்டின் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டு பிரச்னையை சரிசெய்வதற்காக சீனா உலகின் முதல் வன நகரத்தை தெற்கு லியுஜூயு பகுதியில் வடிவமைத்து வருகிறது.
உலகில் மக்கள் தொகை பெருக்கத்திற்குஏற்ப காடுகளும் மரங்களும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இயற்கை சார்ந்த சூழல் இல்லாமல் சுற்றுசூழல் மாசுபட்டு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், சீன அரசு தங்கள் நாட்டின் சுற்றுச்சூழல் மாசுபாட்டு பிரச்னையை சரிசெய்வதற்காக உலகின் முதல் வன நகரத்தை தெற்கு லியுஜூயு பகுதியில் உருவாக்கி வருகிறது.
சுமார் 900 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கபட்டு வரும் இந்த வனநகரில் அலுவலகங்கள், வீடுகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து கட்டிடங்களும் மரங்கள், செடிகளால் ஆனதாகவே அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பசுமை சூழ்ந்ததாக அமைக்கப்படும் இந்த நகரில் 40,000 மரங்கள் உள்ளன.
இந்நகரில் சுமார் 100 வகைகளைச் சேர்ந்த ஒரு மில்லியன் செடிகள் நடப்பட உள்ளது. இவற்றால் 10,000 டன் கார்பன் டை ஆக்சைடு உட்கொள்ளப்படும். ஆண்டுக்கு 57 டன்கள் மாசுபாடு இந்த செடிகளால் கிரகிக்கப்படும்.
அதைபோல், போக்குவரத்திற்காக இந்த நகரில் அதிவிரைவு ரயில் தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே இந்த நகரில் இயக்கப்படும்.இயற்கை சார்ந்த இந்த நகரின் மின்தேவைகள் சோலார் மற்றும் ஜியோதெர்மல் (புவியில் இருந்து வெளியேறும் வெப்பம்) மூலம் பெறப்படும் வகையில் இந்நகரம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் மரங்கள், செடிகள் வளர்க்கப்படுவதற்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட்டு வருவதாகவும் 2020 ம் ஆண்டிற்குள் இந்த வன நகர பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு, 30,000 பேர் குடியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.