July 6, 2017
தண்டோரா குழு
போலி சான்றிதழ் கொடுத்து அரசுபணியும், பட்டமும் பெற்றிருந்தால் அதனை உடனே ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தால் அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என மகாராஷ்டிர அரசு, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மகாராஷ்டிர அரசின் உத்தரவு செல்லாது என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தாலோ அல்லது பட்டம் பெற்றிருந்தாலோ அவர்களின் பதவியை பறிக்கலாம் என அதிரடியாக உத்தரவிட்டனர்.
மேலும் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இயலாது எனவும் நீதிபதிகள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.