July 6, 2017
tamilsamayam.com
சில தினங்களுக்கு முன் திருமணமான கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரூ.2,200 கோடிக்கு ஜாக்பார்ட் பரிசு கிடைத்துள்ளது.
கால்பந்து கதாநாயகன் மெஸ்ஸியின் திருமண விழா, அர்ஜெண்டினாவின், ரோசாரியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. கடந்த ஜூலை 1ம் தேதி நடந்த இந்த திருமண விழாவில் அழகிய உடையில் வந்த காதலர்களை, உலகின் பிரபல கால்பந்து நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தி வரவேற்றனர்.
இவருக்கு திருமணம் முடிந்த கையோடு மிகப்பெரிய ஜாக்பார்ட் அடித்துள்ளது. ஆம் இவர் தற்போது விளையாடி கொண்டிருக்கும், பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக, தற்போது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு, அதாவது வரும் 2021 வரை இவர் பார்சிலோனாவுக்காக விளையாட உள்ளார். இதற்கான இந்த அணி நிர்வாகம் இவருக்கு €300 மில்லியன் ஈரோ அதாவது ரூ. 2,200 கோடி தர சம்மதித்துள்ளது.
இவர் பார்சிலோனாவுக்காக 583 போட்டிகளில் விளையாடி 507 கோல் அடித்து கிளப் அணியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார். இது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய திருமண பரிசாக கருதப்படுகின்றது.