July 6, 2017
தண்டோரா குழு
தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியினை ரத்து செய்யக் கோரி திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 4நாட்களாக திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட காரணத்தினால் இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கபட்டுள்ளது.மேலும், இரட்டை வரிவிதிப்புக்கு எதிராக நடந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டதால், நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.