July 6, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் சினிமா டிக்கெட் விலை 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும். மேலும், தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிக்கெட் விலை ரூ.120யுடன் சேர்த்து 28% ஜிஎஸ்டி வரியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா டிக்கெட் எவ்வளவு?
ரூ.120 டிக்கெட் இனி ரூ.153
ரூ.110 இனி ரூ.130
ரூ.100 இனி ரூ.118
ரூ.90 இனி ரூ.106
ரூ.50 இனி ரூ.59
ரூ.10 இனி ரூ.12