July 6, 2017
தண்டோரா குழு
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ராஜஸ்தானில் நொறுங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐஜி 23 விமானம் ராஜஸ்தானில் ஜோத்பூரிலுள்ள பலேசர் என்னும் பகுதியில் நொறுங்கி விழுந்துள்ளது. 48 மணிநேரத்தில் நடந்த இரண்டாவது விபத்து ஆகும். எம்ஐஜி 23 விமானத்தின் பயணித்த விமான ஓட்டுநர்கள் விமானத்திலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பியுள்ளனர்.
அருணாச்சலபிரதேஷ மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த, இந்திய விமான படைக்கு சொந்தமான மற்றொரு Advanced Light Helicopter (ALH) விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியது. ஆனால் இந்திய விமான அலுவலகம் இது குறித்து உறுதி செய்யவில்லை.
கடந்த மே மாதம், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேஷ் எல்லையில் சுக்ஹோய் – 3௦ போர் விமானம் விபத்துக்குளாகி இரண்டு விமான ஒட்டுநர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.