July 6, 2017
தண்டோரா குழு
ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தனி ஒருவன்’. அர்விந்த் சாமி, நயன்தாரா பலர் நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ராம் சரண், ராகுல் பிரீத்தி சிங் நடிப்பில் ‘துருவா’ என்ற பெயரில் வெளிவந்தது.
இந்நிலையில், தனிஒருவன் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாம்.இதனை உறுதி செய்யும்படி, இப்படத்தில் அர்ஜுன் கபூர்-அரவிந்த் சாமி வேடத்திலும்,சித்தார்த் மல்ஹோத்ரா- ஜெயம் ரவி வேடத்திலும் நடிக்க சபீர் கான் இயக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.