July 7, 2017
தண்டோரா குழு
மத்திய பிரதேஷ் மாநிலத்தின் நர்மதா ஆற்றங்கரையில் 12 மணிநேரத்தில் சுமார் 66 மில்லியன் மரங்கள் நட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேஷ் மாநிலத்திலுள்ள நர்மதா ஆற்றங்கரையில், அம்மாநிலமெங்கும் உள்ள சுமார் 1.5 மக்கள் ஒன்று சேர்ந்து, 12 மணிநேரத்தில் சுமார் 66 மில்லியன் மரங்களில் நட்டு உலக சாதனை புரிந்துள்ளனர்.
பாரிஸ் உடன்படிக்கை கீழ், நாட்டின் காலநிலை மாற்றம் இலக்குகளுக்கு ஏற்ப, இந்த சாதனை முறிப்பு நிகழ்ச்சிக்கு அம்மாநில அரசு ஏற்பாடு செய்தது.இந்த சாதனையை பார்க்க வந்த கின்னஸ் உலக சாதனை பிரதிநிதிகள், அதை விரைவில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்வார்கள் என்று கருதப்படுகிறது.
2௦3௦ம் ஆண்டிற்குள், நாட்டிலிருக்கும் வனப்பகுதியை 12 சதவீதம் உயர்த்த சுமார் 6 பில்லியன் டாலர் செலவழிக்கப்படும் என்று இந்திய அரசு உறுதியளித்திருந்தது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்னர், உத்தர பிரதேஷ் மாநிலத்தின் தொண்டர்கள் 49.3 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு, 2௦13ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் நடப்பட்ட 850,000 மரங்கள் சாதனையை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.