July 7, 2017 தண்டோரா குழு
இந்தோனேசியாவில் 15 வயது சிறுவன் 73 வயது மூதாட்டியை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி (15) மலேரியா காய்ச்சலில் அவதிப்பட்ட போது அவன் வீட்டின் அருகில் வசிக்கும் 73 வயதான மூதாட்டி ரொகாயா பின்டி கியாகஸ் முகமது ஜாக்பார் அவனை நல்ல முறையில் கவனித்துக்கொண்டார்.
இதனால், அந்த மூதாட்டி மீது அதிக அன்புக் கொண்டிருந்தான் அந்த சிறுவன்.இந்த அன்பு நாளடைவில் காதலாக மாறியது.இதனால் அந்த மூதாட்டியை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினான்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் தங்களுடைய திருமணத்தை நிறுத்தினால், இருவரும் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்களுடைய திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரங் எந்தா என்னும் இடத்தில் நடந்ததுள்ளது.
இது குறித்து அந்த கிராமத்தின் தலைவர் சிக் அனி கூறுகையில்,
“ரியாடியின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, இருவரும் தற்கொலை செய்துகொள்வாம் என்று மிரட்டியதால், அவர்களுடைய திருமணத்தை நடத்தினோம். அந்த சிறுவனுடைய தந்தை இறந்த பிறகு, அவனுடைய தாய் மறுமணம் செய்துக்கொண்டார். அவனை கவனிக்க யாருமில்லை. ரோஹாயா இதற்கு முன் இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது. அவருக்கு ஒரு மகன் கூட இருக்கிறான். ஒருவரையொருவர் அதிகமாக நேசிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.