July 7, 2017
tamilsamayam.com
தல ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை இயக்குனர் சிவா அறிவித்துள்ளார்.சிறுத்தை சிவா இயக்கத்தில் 3வது முறையாக இணைந்து தல அஜித் விவேகம் படத்தில் விறுவிறுப்பாக நடித்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த மாதம் சர்வைவா பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரபேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் “தல விடுதலை” எனத் தொடங்கும் பாடலின் சிங்கிள் ட்ராக் வரும் 10ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பட இயக்குனர் சிவா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.