July 8, 2017
தண்டோரா குழு
இலங்கை அரசின் அபராத விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தை அறிவித்துள்ளனர்.
இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மீன்வர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ராமேஸ்வரத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின் ,
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும். இலங்கை கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை வாபஸ் பெறவேண்டும். பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க அனுமதிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தலைமை தபால் நிலையம் அருகே ஜூலை 14ல் தீக்குளித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு.