July 8, 2017 தண்டோரா குழு
மரியாதைக்குரிய பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதியாக சிறையில் உள்ள பேரறிவாளன் பரோல் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,
மரியாதைக்குரிய பேரறிவாளன் பரோல் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.
அதைபோல். திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் கேள்விக்குப் பதிலளிக்க முதலமைச்சர்,
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட விளக்கம் கோரியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், சட்டநிபுணர்களின் ஆலோசனை பெற்று பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.