July 8, 2017 தண்டோரா குழு
காவல் சிறுவர், சிறுமியர் மன்ற திட்டத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற சிறுவர்களுக்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் இன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவை மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் சிறுவர், சிறுமியர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மன்றங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளை கண்டறிந்து அவர்களுக்கு தனி மனித ஒழுக்கம், நாட்டுப்பற்று, பொது அறிவு மற்றும் உடல் ரீதியான பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்த மன்றங்களில் சுமார் 400 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக மன்றத்தில் பயிற்சி பெற்று வரும் சிறுவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
அதற்கான பரிசளிப்பு விழா இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசு அளித்தார்.