July 10, 2017
ஏர்இந்தியா விமான நிறுவனம் உணவுப் பட்டியலில் இருந்து அசைவ உணவு வகைகளை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானங்களில் ‘எக்கானமி கிளாஸ்’ எனப்படும் குறைந்த கட்டண வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு இனி அசைவ உணவு வழங்குவதில்லை அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஏர்இந்தியா அதிகாரிகள் கூறுகையில்,
விமானங்களில் பயணம் செய்பவர்களின் கட்டணத்தை குறைப்பதற்காகவும், உணவு வீணாவதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதே சமயம் சர்வதேச விமானங்களிலும், உள்நாட்டு விமானங்களில் முதல்வகுப்பு பயணிகளுக்கும் அசைவ உணவுகள் வழக்கம் போல் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறைவான பயண தூரம் செய்யும் பயணிகள் விமானங்களில் அசைவ உணவுகள் வழங்குவதை ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஏர்இந்தியா விமான நிறுவனம் நிறுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.