July 11, 2017 தண்டோரா குழு
‘பவர் பாண்டி’ கதையை உருவாக்கியதிற்கான காரணம் இது என ‘வேலையில்லா பட்டதாரி 2’ பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் தெரிவித்தார்.பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் தனுஷிடம் ‘பவர் பாண்டி’ படத்தின் 2-ம் பாகம் எப்போது என்று கேள்வி எழுப்பினர்.
இது குறித்து தனுஷ் கூறும்போது,
‘பவர் பாண்டி’ படத்தில் 80 வயதைத் தாண்டிய ஒருவருடைய காதலை நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் 50 – 60 வயது தாண்டிய பெரியவர்களை பணம் கொடுக்காமல் வீட்டு வேலை செய்யும் உதவியாளர்களாக பார்க்கிறார்கள். பலர் வேலைக்கு செல்வதால் என்னுடன் வந்திருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதை பல இடங்களில் பார்த்தேன்.
பெற்றோர்கள் 50- 60 வயது தாண்டியவுடன் நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதாக மட்டுமே ‘பவர் பாண்டி’ கதையைப் பார்த்தேன்.” என்று கூறினார்.
மேலும் , ‘பவர் பாண்டி’ 2-ம் பாகம் கதையையும் எழுதி வைத்துள்ளேன். கண்டிப்பாக 2-ம் பாகம் வரும். ஆனால், அதற்கிடையில் வேறு ஏதாவது ஒரு படம் செய்கிறேனா என்பதற்கான விடை எனக்கே தெரியாது. 2-வது அல்லது 3-வது இயக்கமாக ‘பவர் பாண்டி 2’ இருக்கும்.”
என்று கூறினார்.