July 11, 2017 தண்டோரா குழு
தேர்தலில் வாக்களித்தவர்கள் விரலில் மை வைக்க புதிய பேனா தயாரிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்(MPVL) நிறுவனம், தேர்தலில் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையை பல ஆண்டுகளாக தயாரித்து விநியோகம் செய்து வருகிறது.
தற்போது விரலில் மை வைக்க புதிய பேனா தயாரிக்கப்பட்டு, ஜூலை 17ம் தேதி நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில் இது பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பெயரில், இந்த பேனாவை தயாரிக்க தேசிய இயற்பியல் ஆய்வகம், தேசிய ஆராய்ச்சி அபிவிருத்தி கார்ப்பரேஷன் மற்றும் தேசிய ரசாயன ஆய்வகம் ஆகியவற்றின் ஆதரவுடன் MPVL நிறுவனம் இந்த பேனாவை தயாரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை பயன்படுத்தப்பட்ட பாட்டில் மைகளுக்கு பதிலாக பேனாவை பயன்படுத்தப்படும்போது, சுமார் 5௦ சதவீத செலவு மிச்சப்படுத்தபடும் என்றும் சுமார் 1௦௦௦ வாக்காளர்கள் கையில் மை வைக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.