July 11, 2017
தண்டோரா குழு
சென்னை 28 இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு ‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி உலக சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்ந்த இடமான பிஜி தீவில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 20ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இங்கு 52 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்த 52 நாட்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக வெங்கட்பிரபு படத்திற்கு இசையமைத்து வரும் யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவில்லை மாறாக இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.