July 12, 2017
தண்டோரா குழு
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம் தோல்வியை தழுவியதையடுத்து, அதற்கான இழப்பீட்டை வழங்குவதாக சல்மான் தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் தயாரிப்பில் கபீர்கான் இயக்கத்தில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.114.50 கோடி வசூலித்தது. விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால், அதற்கான நஷ்டத்தை ஈடுகட்ட சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக சல்மான் கான் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியான ’டியூப்லைட்’ ரசிகர்களை ஏமாற்றியது. இதனால் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு சல்மான் கானிடம் கேட்டதற்கு, ரூ.55 கோடி நஷ்ட ஈடு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.