July 12, 2017 தண்டோரா குழு
குஜராத்தில் ரமலான் நோன்பு ‘தொற்று நோய்’ என்று பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் நான்கம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் எழுத்தாளர் பிரேம்சந்த்தின் ‘இக்தா’ எனும் சிறுகதை உள்ளது.அதில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பின்பற்றும் நோன்பு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் தொற்றுநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து குஜராத் மாநில பள்ளி பாடநூல் வாரியம் அதிகாரி நிதின் பெத்தானி கூறுகையில்,
“காலரா நோயை, இந்தியில் ‘ஹைசா’ என்று அழைப்பர். ‘ஹைசா’ என்பதற்கு பதிலாக ‘ரஜா’ என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
“இது போன்ற தவறை செய்பவர்களின் பெயரை வெளிப்படையாக அறிவித்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்” என்று குஜராத் கல்வி அமைச்சர் புபேந்தர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாமியர்களின் புனித நோன்பு குறித்து தவறான கருத்தை வெளியிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு முன் இயேசு பிரானை இதுபோல் ஒரு தவறான வார்த்தையால் அவமதிப்பு செய்தனர். இந்த தவறு நடந்து சில தினங்களுக்குள், மீண்டும் அச்சு பிழையால் சர்ச்சை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.