July 13, 2017
தண்டோரா குழு
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாகவும்,அதற்காக முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.இதனை டிஜிபி டிஜிபி சத்தியநாராயணா மறுத்துள்ளார்.
இந்நிலையில், இப்புகார் குறித்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.