July 13, 2017 தண்டோரா குழு
கங்கை நதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 5௦,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
கங்கை நதி, வட இந்தியாவின் பல இடங்களில் பாய்ந்து, இறுதியாக வங்காள விரிக்குடாவில் கலக்கிறது. இந்துக்களின் புனித நதியாக கங்கை நதி கருதப்படுகிறது. கடந்த 2௦௦7-ம் ஆண்டு நதிகள் குறித்து நடந்த ஆய்வில், உலகின் 5-வது மிகவும் மாசுப்பட்ட நதி கங்கை என்று தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து கங்கை நதியில் குப்பை கொட்டுபவருக்கு 5௦,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையில், “கங்கை நதியில் குப்பைகளை கொட்ட அனுமதி கிடையாது என்று நீதிபதி ஸ்வாட்டானர் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.அதனை நிறைவேற்ற குழு அமைக்கப்படும்” என்று வெளியிட்டுள்ளது.