July 14, 2017 தண்டோரா குழு
பிக் பாஸ் சர்ச்சை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி.யில் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டி.வி. நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இதில் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75 சதவிகிதம் நிர்வாணமாகவும் நடித்தும் வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.’ என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், “தமிழக அரசில் எல்லாத்துறையிலும் ஊழல் பெருகி உள்ளது.” என்று தெரவித்திருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் வீட்டின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கமலஹாசன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.