July 14, 2017 தண்டோரா குழு
மும்பையின் கூகுள் நிறுவன ஊழியர் தனது தாயுடன் உணவகம் ஒன்றை நடத்தி அதன் மூலம் ஆண்டிற்கு 5௦ லட்சம் லாபம் சம்பாதிக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரை சேர்ந்த முனாஃப் கபாடியா,ஒரு எம்பிஏ பட்டத்தாரி. அவர் அமெரிக்கவின் பிரபல நிறுவனமான கூகுளில் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றி வரும்போது, தான் ஒரு தொழிலதிபராக வேண்டும் என்னும் எண்ணம் உருவாகியது. உடனே தனது கூகுள் பணியை விட்டு வெளியேறி, மும்பை நகரில் ‘தி போரி கிச்சன்’ என்னும் உணவகத்தை தொடங்கினார்.
தனது தாய் நர்சீ மோன்ஜி சுவையாக தயாரிக்கும் மட்டன் கொத்துக்கறி சமோசாவை அந்த உணவகத்தில் விற்பனை செய்ய தொடங்கினார். அந்த சுவையான உணவு வகை அதிக விற்பனை ஆனது. அது குறித்து மும்பை மக்கள் அதிகமாக பேசி தொடங்கினர். அந்த உணவு வகையின் பெருமை மற்ற இடங்களுக்கு பரவ தொடங்கியது. இதனால் தொழிலும் நன்கு வளர ஆரம்பித்துள்ளது. அதன் விளைவாக இந்த ஆண்டு மட்டும் ரூ 50 லட்சம் லாபாம் ஈட்டியுள்ளார்.
இந்த உணவகம் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை செயல்படுகிறது.முனாப் கபாடியாவுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றிக்கும் அவருடைய தாயின் சமையல் திறன் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,ராணி முகர்ஜி, அஷ்டுகோஷ் கோவரிகர், பாராகான், ஹுமா குரேஷி ஆகிய பாலிவுட் பிரபலங்கள் இந்த தி போரி கிச்சன் வரும் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.