July 14, 2017 தண்டோரா குழு
ஓடிஸாவில் தலைகள் ஒட்டி பிறந்த இரட்டையர்களுக்கு புதுதில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
ஓடிஸா மாநிலத்தின் கந்தாமால் மாவட்டத்திலுள்ள மிலிபாடா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஹனி மற்றும் சின்ஹா என்னும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அந்த குழந்தைகளின் தலை ஒட்டியிருந்தது. அதை பிரிப்பதற்காக புதுதில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தங்கள் பெற்றோருடன் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
இந்த குழந்தைகளின் மருத்துவச் செல்விற்காக மாவட்ட நிர்வாகம் 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது. அதேபோல், மாவட்ட நோயாளிகளின் நலன்புரி கழகம் 25,௦௦௦ ரூபாய் வழங்கியுள்ளது. இது தவிர, சிகிச்சைக்கான அனைத்து செலவுகளை மாநில சுகாதார துறை ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி அளித்து உள்ளது.
மேலும், தேசிய இளைஞர் நலன் உதவி தலைவர் சௌம்யா சமன்டாரே மற்றும் நுபடா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆயுஷ், அந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடியும் வரை அந்த குடும்பத்தினருடன் இருப்பர்.