May 21, 2016 தண்டோரா குழு
நர மாமிசத்தை தகரக் குவளையில் அடைத்து மற்ற இறைச்சியை அனுப்பும் வண்ணம் சீனா ஆப்பிரிக்காவிற்கு அனுப்புகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டைச் சீனாவின் அரசுத்தூதர் யாங்க் யோமிங்க்ஸ் ஆணித்தரமாக மறுத்துள்ளார்.
சீனா இறந்து போன மனித உடலை ஊற வைத்து, பதப்படுத்திப் பின்னர் உணவு அடிக்கும் டின்களில் அடைத்து ஆப்பிரிக்காவின் சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுப்புகிறது என்பன
போன்று பல வதந்திகள் சில காலமாக சாம்பியாவில் உலா வருகின்றன.
சீனாவுக்கும், சாம்பியாவுக்கும் இடையே உள்ள இணக்கத்தைக் கெடுக்கும் வகையில் சாம்பியாவிலுள்ள சில செய்தித்தாள்கள் இத்தகையை செய்திகளைப் பரப்புகின்றன.
மற்றும் முக நூலில் காணப்படும் தவறான கருத்துகளும் சீனாவிற்கு எதிரான தகவல்களைப் பரப்புகின்றன என்றும் சீனா புகார் கூறியுள்ளது. அதே சமயம் டெயிலி போஸ்ட் பத்திரிகை தனது டிவிட்டரில் இந்தச் சம்பவம் மிகவும் திடுக்கிடவைக்கும் ஒன்று என்று கூறியுள்ளது.
மேலும் சீனாவில் இறந்த மனிதர்களைப் புதைக்க இடமில்லாத காரணத்தினால் தான் இவ்வாறு செய்யப்படுகிறது என்றும். பீஜிங்க் சிறந்த நரமாமிசமல்லாத இறைச்சியைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒதுக்கி வைத்து விட்டு.
நர மாமிசத்தை ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்றது என்று சீனாவின் இறைச்சி நிறுவனத்தில் வேலை செய்யும் சில தொழிலாளிகளே தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறப்படுகின்றன.
ஆனால் இவை அனைத்தும் உண்மையல்ல என்றும், செய்தித் தாள்களில் காணப்படும் புகைப்படங்கள் ரெஸிடெந்ட் ஈவில் 6 என்ற வீடியோ கேம்மில் காட்டப்படும் புகைப்படங்களே என்றும் ஸ்னோப்ஸ்.காம் அறிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய வதந்திகள் நாட்டையே உலுக்கியுள்ளது எனவும், சாம்பியா இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இந்தச் சங்கடத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் சாம்பியாவின் பாதுகாப்பு அதிகாரி கிரிஸ்டஃபர் முலெங்காவிடம் சீன அரசு வலியுறுத்தியுள்ளது.
சாம்பிய அரசு, இந்த விஷயத்தைத் தகுந்த அதிகாரிகளின் தலைமையில் தீவிர விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதாகவும், நடந்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் சீனாவின் எக்ஸ்ஹா நியூஸ் ஏஜன்சியிடம் தெரிவித்துள்ளது.
சீனாவும், சாம்பியாவும் வெகு காலமாக சிறந்த நட்புறவுடன் வியாபாரம் செய்து வருகிறது. சாம்பியாவின் உள்கட்டமைப்புகளுக்குச் சீனா நிதியுதவி செய்கிறது. பதிலாக சாம்பியாவின் இயற்கை வளங்களை தங்கள் நாட்டு மேன்மைக்குச் சீனா பயன்படுத்துகிறது.
இது இப்படியிருக்க சாம்பியாவில் வாழும் மக்கள் பலருக்கு சீனாவின் இந்த ஆளுமைப் போக்கு மனக்கசப்பை உருவாக்கியுள்ளது. சீனாவின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் மிகுந்த வருந்தத்தக்கச் சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது இவர்கள் குற்றச்சாட்டு.
மேலும் சீனத்தரப்பு நிறுவனங்களில் மிகுந்த ஊழல் நிலவுகின்றது. அதன் காரணமாக 2005ல் ஒரு தொழிற்சாலை வெடித்து 50 தொழிலாளர்கள் இறந்தனர் என்பதும் இவர்களது புகார்.