July 14, 2017 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், மற்றும் மாணவர்களுடன் இணைந்து சிறப்பு டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
இச்சிறப்பு டெங்கு தடுப்பு பணிகள் மாநகராட்சியின் ஐந்து மண்டல பகுதிகளிலும் நடைபெற்றது.வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மத்திய மண்டலத்தில் சங்கனூர் மற்றும் இரத்தினபுரி இடங்களில் கொங்கு நர்சிங் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4890.
தெற்கு மண்டலம் குனியமுத்தூரில் நேரு கல்லூரி மாணவர்கள் 100 பேரும்பணியாளர்களும் 60 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1643.
கிழக்குமண்டலத்தில் நேரு நகர் மற்றும் காளப்பட்டி இடங்களில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் பணியாளர்களும் 65 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின்எண்ணிக்கை 3015.
மேற்கு மண்டலத்தில் கல்வீராம் பாளையம், பொம்மனாம் பாளையம், ஓணாம்பாளையம்இடங்களில் இராமலிங்க சௌடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 120 பேரும் பணியாளர்களும் 50 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1320.
வடக்கு மண்டலத்தில் காந்தி மாநகர் இடத்தில் சி.எம்.எஸ். கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 2525.
இனி வரும் காலங்களில் மாநகராட்சி ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள இடங்களில் இப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி,மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மற்றும் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர்.ரவி, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.