July 15, 2017 tamilboldsky.com
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துவிட்டதாகவும், அதை தடுக்க வேண்டும் என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
நடிகை ஹன்சிகாவின் பேட்டி:
சமூகத்தில் பெண்களுக்கு எதிரான் வன்கொடுமை பெருகி வருகின்றது. தவறு செய்பவர்கள் திருந்த வேண்டும் . ஒரு பெண்ணுக்கு தொல்லை கொடுப்பதால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சினிமாவிலும் பெண்களுக்கு தொந்தரவு இருப்பதாக பலரும் கூறுகின்றனர். நல்ல வேலையாக எனக்கு அதுமாதிரி எந்த பிரச்னையும் வந்ததில்லை. அப்படி வந்திருந்தால் நான் சினிமாவை விட்டே ஒட்டியிருப்பேன்.
பெண்கள் தனியாக போனில் பேசினால் பெற்றோர்கள் சந்தேகத்தோடு பார்க்கின்றனர். ஆனால் ஒரு ஆண் வீட்டின் தனி அறையில் விடிய விடிய கணினியில் மூழ்கியிருப்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகின்றனர். ஆண் குழந்தைகளையும் கண்காணிப்போடு வளர்க்க வேண்டும்.
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், சூட்டிங் இல்லாத நாட்களில் கோயிலுக்கு சென்று வழிபடுவது என் வழக்கம். ஆனால் அங்கு என் பின்னே ஆண்கள் வருவது ஒரு மாதிரியாக இருக்கும். ஆனாலும் ரசிகர்கள் என் மேல் உள்ள அன்பின் பெயரால் அப்படி வருகின்றனர் என்பதால் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என தெரிவித்துள்ளார்.