July 15, 2017 தண்டோரா குழு
பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
பேஸ்புக் குறித்து அறியாத மக்களும், அதை பயன்படுத்துவோர் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நகர் புறமாக இருந்தாலும் சரி கிராமத்து புறமாக இருந்தாலும் சரி, அனைவருடைய கவனத்தை பேஸ்புக் ஈர்த்துள்ளது.
முன்னதாக,அதிகமாக பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையின் அமெரிக்க முதல் இடத்தில் இருந்தது. தற்போது இந்திய முதல் இடத்தை பிடித்துவிட்டு, அமெரிக்காவை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் பேஸ்புக்கை கணக்குகள் தொடங்கியவர்கள் மட்டும் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே 6 மாதத்தில் அமெரிக்காவில் பேஸ்புக் கணக்குகள் தொடங்கியவர்கள் 12 சதவீதமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பேஸ்புக் பயன்டுத்துவோர்களில் முக்கால் பேர் ஆண்கள் என்றும்,ஆனால் அமெரிக்காவில் பேஸ்புக் பயன்டுத்துவோர்கள் 54 சதவீதம் பெண்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பேஸ்புக் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதனுடைய மொத்த பயன்பாடு குறைவாகவே இருக்கிறது. மக்கள் தொகையில் 19 சதவீதம் பேர் சமூக வலைத்தளங்களை ஜூன் மாதத்தில் உபயோகப்படுத்தியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.