July 15, 2017 தண்டோரா குழு
நோபல் பரிசு பெற்ற சீன புரட்சியாளர் லியு சியாபோ உயிரிழந்த பிறகு, வீட்டில் சிறை வைக்கப்பட்ட அவருடைய மனைவியின் மீது உலக கவனம் திருப்பப்பட்டது.
கடந்த 2௦௦9ம் ஆண்டு, சீனாவின் ஜனநாயகம் தொடர்பாக ‘சார்டர் 8’ என்னும் நூலை லியு சியாபோ வெளியிட்டார். இதையடுத்து, சீனா அரசு அவரை 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவருடைய மனைவி வீட்டில் சிறை வைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த லியுவிற்கு ஈரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு பரோல் வழங்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு பலனில்லாமல் உயிரிழந்தார்.
இந்நிலையில் லியுவின் இறப்பை அடுத்து, உலக கவனம் முழுவதும் வீட்டு சிறையிலிருக்கும் அவருடைய மனைவி மீது திரும்பியது. அவரை விடுவிக்குமாறு பலர் குரல் கொடுத்து வந்தனர். அவருக்காக எழுப்படும் குரலை சீன அரசு கேட்டு விடுவிக்குமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி விடுவிக்கப்பட்டால், கணவரை இழந்த அவரால் மீண்டும் சகஜமான நிலைக்கு திரும்ப முடியுமா? போன்ற கேள்விக்கு யாரும் சரியான பதில் கூற முடியாது. காலம் தான் ஒரு நல்ல பதிலை தரும் என்பதில் ஐயம் இல்லை.