July 15, 2017 தண்டோரா குழு
இந்திய ரயில்வேயின் முதல் சூரிய சக்தியால் இயக்கப்படும் ரயிலை ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
புதுதில்லியின் சப்டர்ஜுங் ரயில்நிலையத்தில் இருந்து முதல் சூரிய சக்தியால் இயக்கப்படும் முதல் ரயிலை ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
சோலார் 72௦௦ கிலோ வாட் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனுடையது. இதன் மூலம் ரயிலின் உள் விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் இதர மின்சார அமைப்புகள் இயங்கும். இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பெட்டியில் இருந்து சுமார் 9 டன் கார்பன் காற்று வெளியேறுவதால், 21,௦௦௦ லிட்டர் டீசல் மிச்சப்படுத்தப்படுகிறது. இதனால் ஆண்டிற்கு சுமார் 12 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது.
இந்த சோலார் ரயில் சேவையானது, முதன்முறையாக டில்லியின் சராய் ரோஹில்லா – ஹரியானாவின் பருக் நகரிடையே இயக்கப்பட உள்ளது.
மேலும்,இந்த சோலார் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.