• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ லெஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவில்

July 17, 2017 findmytemple.com

சுவாமி : லெஷ்மி நாராயணர்.

அம்பாள் : லக்ஷ்மி.

மூர்த்தி : தன்வந்திரி பெருமாள், ஆஞ்சநேயர் சன்னதி.

தீர்த்தம் : துளசி தீர்த்தம்.

தலவிருட்சம் : பன்னீர்.

தலச்சிறப்பு :

ஸ்ரீ லெஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவில் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. பெருமாளின் மடியில் லெஷ்மி தேவி அமர்ந்தவாறு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வரதராஜ பெருமாள் உற்சவராக உள்ளார். இத்தலத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், தனி சன்னதிகளில் அருள்பாலிகின்றனர். லெஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் அமைந்துள்ள தன்வந்திரி பெருமாளை வழிபடுவதால் தீராத வியாதிகள், ரோகங்கள் நிவர்த்தியாகும்.

இத்தலத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் பால உருவம் கொண்ட ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வரூபம் கொண்ட ஆஞ்சநேயர் என இரண்டு ஆஞ்சநேயர் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார். விஸ்வரூபத்தில் ஆஞ்சநேயர் தலைமுடி மீது கிரீடதிற்கு பதிலாக மணி அணிந்தவாறு உள்ளார். இத்தலத்தில் உள்ள ஆஞ்சிநேயரை நெய் தீபம், வடமாலை சார்த்தி வழிபடுவதால் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் மற்றும் சனி தோஷம், எம பயம் நீங்கும்.

மேலும் இதலத்தில் உள்ள பெருமாளை வழிபடுவதால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நிவர்த்தியாகும். லெஷ்மி நாராயண பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பொங்கலை உண்டால் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இத்திருக்கோவில் நாராயண பெருமாள் மிகவும் பிரசித்தி பெற்றவராக கருதப்படுகிறார்.

தல வரலாறு :

கல்யாண சுந்தரேஸ்வரர், பார்வதி தேவியின் பூலோக முறைப்படி நடந்த திருக்கல்யாணத்தை லெஷ்மி நாராயண பெருமாள் நடத்தி வைத்ததாக கருதப்படுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் லெஷ்மி நாராயண பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலம் 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் திருப்பணி செய்து 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நடைதிறப்பு : காலை 7.00 to 12.00, மதியம் 4.30 to 7.00.

திருவிழாக்கள் :

இராமானுஜர் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.வரதராஜ பெருமாள் சுவாமி வீதியுலா ஒவ்வொரு ஆண்டும் கரிநாள் தை மாதம் 3ம் தேதி நடைபெறும்,

அனுமந்ஜெயந்தி,

ராமநவமி,

கிருஷ்ண ஜெயந்தி.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : ஸ்ரீ லெஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவில்,திருமணஞ்சேரி, குத்தலாம் வட்டம், நாகை மாவட்டம்.

மேலும் படிக்க