July 17, 2017 தண்டோரா குழு
இந்தியாவின் 14 வதுகுடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிக்களித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
பா.ஜ.க, சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.776எம்.பி.க்கள் மற்றும் 4,120எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க உள்ளனர். காலை 10 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தில்லி நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குச்சாவடி, மாநில சட்டப்பேரவையில் தலா ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று பதிவாகும் ஓட்டுக்கள் ஜூலை 20ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.