• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி

July 18, 2017 தண்டோரா குழு

தலித் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச இடையூறு செய்வதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ராஜினாமா செய்துள்ளார்.

மாநிலங்களவை கூட்டம் இன்று ‌கூடியதும், உத்தரப் பிரதேசத்தில் அப்போது தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்துபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிகேள்வி எழுப்பி‌னார். அவர் பேசுவதற்கு 3 நிமிடங்‌கள் மட்டுமே‌ அனும‌தி அளிக்கப்பட்டது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்தமாயாவதி ஆவேசமாகப் பேசினார். இதனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தலித் மற்றும் பழங்குடியினர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத்தான் நாடாளுமன்றத்துக்கு வருகிறேன். ஆனால் இங்கு அவர்களின் பிரச்னையை என்ளனால்‌ பேச‌ மு‌டியவில்லை. அவ்வாறு இருக்கும்போது‌ எதற்காக நான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். ‌‌

ஆகையால் எனது பதவியை ராஜினாமா செய்‌ய முடிவு எடுத்துள்ளேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தலித்துகள் பிரச்னையை பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறிமாயாவதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை துணை குடியசுத் தலைவர் அமித் அன்சாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் படிக்க