July 19, 2017
tamilsamayam.com
மாடு உடன் ரோஜர் பெடரர் இருக்கும் படத்தை பதிவிட்டு, இதனை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று சேவக் கூறியுள்ளார்.
லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–5’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், குரோசியாவின் மரின் சிலிக்கை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் அசத்திய பெடரர், முதல் செட்டை, 6-3 என வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அசத்திய பெடரர், 6-1 என எளிதாக வென்று 8வது முறையாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை ரோஜர் பெடரர் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 19வது பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரும், கருத்து தெரிவிப்பதில் மன்னனுமான (கருத்து கந்தசாமியுமான) சேவக், பசுவுடன் ரோஜர் பெடரர் இருக்கும், அவரது பழைய படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பார்ப்பதற்கு அழகாக உள்ளது என்று கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் கடந்த 2003ம் ஆண்டு நடந்த ஸ்விஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தனியார் நிறுவனம் ஒன்று பெடரருக்கு ஜூலியட் என்ற பசுவை பரிசாக வழங்கியது. இதே போன்று, கடந்த 2013ம் ஆண்டும் டிசைரி என்ற பசுவை பரிசாக பெற்றுள்ளார். தற்போது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜருக்கு இதனை நினைவுபடுத்தும் விதமாக சேவக், அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பார்ப்பதற்கு அழகாக உள்ளது என்று கூறியுள்ளார்.