July 19, 2017
தண்டோரா குழு
வட அயர்லாந்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் அரிய வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதால், கல்லாக மாறி வருவது பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
வட அயர்லாந்தில் ஆண்ட்ரிம் கவுண்டியைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் ஜோ பக்ஸ்டன் மற்றும் லூசி பிரெத்வெல்.அவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள். அவர்கள் பிறந்த போது Fibrodysplasia Ossificans Progressiva (FOP) என்னும் அரிய வியாதி தாக்கியுள்ளது. அவர்களுக்கு எட்டு வயது இருக்கும்போது தான், இந்த அரிய வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் பிறந்தபோது காலில் கட்டி ஒன்று இருந்துள்ளது. ஆனால், இந்த சகோதரிகள் பிறந்தபோது, மருத்துவர்கள் அதை சரியாக கவனிக்கவில்லை. ஒரு காலக்கட்டத்தில் அவர்களால் நடக்கவும் கூட முடியாது. காலம் செல்ல செல்ல இந்த வியாதி அதிக வேதனையை தரும். இந்த வியாதிக்கு நிரந்திர குணம் இல்லை.
“வேதனையான காலக்கட்டத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறோம்” என்று அந்த சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.