• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தண்ணீருக்குள் குதித்து ’ரோபோ’ தற்கொலை வாஷிங்டனில் வினோதம்!

July 19, 2017 தண்டோரா குழு

பொதுவாக மனிதர்கள் தான் வேலை பளு காரணமாக அல்லது வேறு சில காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதை நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால்,வாஷிங்டனில் ரோபோ ஒன்று நீருற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைட்ஸ்கோப் கே5 என்ற ரோபோவை கலிஃபோர்னியா நிறுவனம் ஒன்று உருவாக்கியது. 136 கிலோ எடை,5 அடி உயரம் கொண்ட இந்த ரோபோ ஷாப்பிங் மால் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறது.

இந்த ரோபோவின் வேலையே ஷாப்பிங் மாலுக்கு வருபவர்கள் விதிகளை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பது தான். இதற்காக ரோபோவிற்கு ஜி.பி.எஸ், சென்ஸார், கேமரா என அனைத்து வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மணிக்கு 3 மைல் வேகத்தில் இந்த ரோபோ நடக்கும் திறன் கொண்டது. மேலும், போலீஸ் குறிப்புகளில் இருக்கும் குற்றவாளிகளின் படங்களை இந்த ரோபோவின் மெமரியில் ஏற்றியிருப்பதால் அவர்களில் யாரையாவது பார்த்தால், கைது செய்ய இந்த ரோபோ உதவியதாக இருந்தது.

இந்நிலையில்,நேற்று பணியில் இருந்த கே5 ரோபோ அங்கிருக்கும் ஃபவுண்ட்டைன் ஒன்றை நோக்கிச் சென்று அதிலிருந்த தண்ணீருக்குள் திடீரென விழுந்தது. இதையடுத்து, ரோபோவை எடுத்து அதை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால், கே5 மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வரவே முடியவில்லை.

இதனால், ரோபோ தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் தான் தண்ணீருக்குள் சென்றதா? அல்லது வைரஸ் ஏதாவது நுழைந்திருக்குமா? வேறு யாராவது ஹேக் செய்து இந்தக் காரியத்தை நிகழ்த்தியிருப்பார்களா என குழப்பத்தில் இருக்கிறார்கள் இதனை உருவாக்கியவர்கள்.

இதற்கிடையில், ரோபோவின் இந்த செய்தியை கேள்விபட்டவர்கள் கே5 ரோபோவுடன் முன்பு படம் எடுத்ததை ஷேர் செய்து தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க